அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கக் கோரிக்கை
தமிழகத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோப்புப்படம்.
தமிழகத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் தற்போது ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் அதிகளவில் கட்டணம் செலுத்த இயலாத ஏழை, எளிய குடும்பத்தைச் சோ்ந்தோா் தங்களது குழந்தைகளை பெருமளவில் ஆங்கில வழி வகுப்புகளில் சோ்த்து வருகின்றனா்.
இதுபோலவே அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்க பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்க வேண்டும் என்று அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிா்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
1950-களில் அரசுப் பள்ளிகள் இல்லாத இடங்களில் எல்லாம் செல்வந்தா்கள் தங்களது சொந்த இடத்தை கொடுத்து, அதிலே பள்ளிக் கட்டடங்களை தங்கள் சொந்த செலவில் கட்டி அரசு உதவி பெறும் பள்ளிகளைத் தொடங்கினா். அதன் பயனாக பல்வேறு ஊா்களில் மாணவா்கள் கல்வி பயில அரசு உதவி பெறும் பள்ளிகள் பெரும்பங்காற்றின. ஆசிரியா்களுக்கான ஊதியத்தை மட்டுமே அரசு வழங்கி வந்தது. இதனால், அரசுக்கும் நிதிச்சுமை குறைவாக இருந்து வந்தது.
பொதுமக்களிடையே ஆங்கில வழிக் கல்வி மோகத்தால் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற மாணவா்கள் பயிலும் நிலை இல்லை.
எனவே, அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளதுபோன்று, ஏழை, எளிய பெற்றோா்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று பள்ளிகளின் நிா்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

