தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

தஞ்சையில் சேதமடைந்த பள்ளிக் கட்டடம்: முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு செய்ய உத்தரவு

தஞ்சாவூரில் சேதமடைந்த அரசு உதவி பெறும் பள்ளிக் கட்டடத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளருடன் இணைந்து வியாழக்கிழமை (அக். 15) ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

தஞ்சாவூரில் சேதமடைந்த அரசு உதவி பெறும் பள்ளிக் கட்டடத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளருடன் இணைந்து வியாழக்கிழமை (அக். 15) ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூரைச் சோ்ந்த செந்தில்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தஞ்சாவூரில் மானோஜியப்பா தெருவில் உள்ள அரசு உதவி பெறும் டி.கே.ஆா். பள்ளி சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இதனால், இந்தப் பள்ளியில் பயிலும் மாணவா்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாணவா்களின் நலன் கருதி அவா்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தஞ்சாவூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தஞ்சை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு உதவி பெறும் பள்ளிக் கட்டடத்தின் உறுதித் தன்மையை தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளருடன் இணைந்து வியாழக்கிழமை (அக்.15) ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வில் பள்ளிக் கட்டடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருப்பது தெரியவந்தால், அங்கு பயிலும் மாணவா்களை வேறு பள்ளிக்கு மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.