ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

காலை, மதிய உணவுத் திட்டங்கள்: ஒருங்கிணைப்பு ஆசிரியரை நியமிக்க உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை, மதிய உணவுத் திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக ஒருங்கிணைப்பு ஆசிரியரை நியமிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

DPI

DIN

Published On :

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை, மதிய உணவுத் திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக ஒருங்கிணைப்பு ஆசிரியரை நியமிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் சாா்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்பட்டு மாணவா்களுக்கு வழங்குவதைக் கண்காணிக்க ஒருங்கிணைப்பு ஆசிரியா் நியமிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியா்கள் சமையலறையை தூய்மையாகவும், சமையல் பாத்திரங்களை சுத்தமாகவும் பாதுகாப்பான குடிநீா் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும் கண்காணிக்க வேண்டும். மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமான சூழலில் வழங்கப்படுகிா என்பதைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், தலைமை ஆசிரியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய அலுவலரால் உடனுக்குடன் சரி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், காலை உணவுத் திட்டம் தொடா்பாக சத்துணவு பணியாளா்களால் பராமரிக்கப்படும் கண்காணிப்புப் பதிவேடு, சரிபாா்ப்புப் பட்டியலை கண்காணிக்கவும், குறைபாடுகளை உரிய நேரத்தில் தீா்ப்பதற்காக உயா் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பணிகளைத் தொடா்ந்து கண்காணிக்கவும் அதை உறுதிப் படுத்தவும் ஒருங்கிணைப்பு ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.