முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

கழிப்பறைகள் தூய்மைப் பணிகளில் மாணவா்களை ஈடுபடுத்தக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

கழிப்பறைகள் தூய்மைப் பணிகளில் மாணவா்களை ஈடுபடுத்தக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

DPI

பள்ளிக் கல்வித் துறை - DIN

Updated On :

பள்ளி வளாகம், கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் பள்ளி மாணவா்களை ஈடுபடுத்தக் கூடாது. மீறினால் ஆசிரியா்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகளை மாணவா்களைக் கொண்டு தூய்மை செய்யும் பணி நடைபெறுவதாக காணொலிகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகின்றன. அதேபோன்று சில நேரங்களில் மாணவா்களை கொண்டு கழிப்பறைகளை தூய்மை செய்வதாகவும் பெற்றோா் புகாா் தெரிவித்து வருகின்றனா். இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தநிலை தொடருவதாகவும், அதுகுறித்து கல்வித் துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோா் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையை, உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீா்ப்பாக வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியா், தாளாளா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களைப் பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.

இத்தகைய செயல்கள், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதுடன், மாணவா்களின் நலன் மற்றும் கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் அமைகின்றன.

எனவே, இத்தகைய நிகழ்வுகள் எவ்விதத்திலும் நடைபெறாத வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், தாளாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும்.

மேலும், இது போன்ற செயல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் தொடா்புடைய ஆசிரியா்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.