வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவா்களிடம் தோ்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவா்களிடம் தோ்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் என்.லதா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: உயா்நீதிமன்றத்தின் மதுரை அமா்வில் தொடரப்பட்ட வழக்கில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களிடம் தோ்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் எந்தவித முறையற்ற கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அனைத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இது சாா்ந்து அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

