
யுபிஐ மூலம் ரூ.2,000 வரையிலான பணப்பரிவர்த்னைகளுக்கு கட்டணம் கூடாது: மத்திய அரசு
யுபிஐ மூலம் ரூ.2,000 வரையிலான பணப்பரிவர்த்னைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு

கோப்புப்படம் - IANS
ஆன்லைனில் யுபிஐ மூலம் ரூ.2,000 வரையிலான தொகை பணப்பரிவர்த்னைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மக்கள், யுபிஐ பரிவர்த்தனை அல்லது ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.2,000 வரையிலான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
ரூ.2,000 அல்லது அதற்கும் குறைவாக பணம் செலுத்தும் மக்களிடமிருந்து எந்தவொரு வங்கி அல்லது நிதியமைப்பும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொருக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா 2026-ன் கீழ், 2007ஆம் ஆண்டு சட்டம் உள்பிரிவு 10ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ரூ.2,000க்கும் அதிகமான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம், என்றும், 2025 - 26ஆம் ஆண்டில் நடந்த யுபிஐ பரிவர்த்தனைகளின் தரவுகள்படி, 2000க்கும் குறைவான பரிவர்த்தனைகளே அதிகம், அதனை விட அதிகமான தொகைக்கு நடந்த பரிவர்த்தனை அளவு 4 சதவிகிதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ரூ.2,000க்கும் கீழ் பரிவர்த்தனை செய்யும் மக்களே அதிகம் என்பதால், இந்த கட்டண விலக்கு சாமானிய மக்களை பாதிக்காது என்றே கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் இது குறித்து விளக்கம் கொடுத்த மத்திய அரசு, ஒரு தனிநபர், மற்றொரு தனிநபருக்கு அனுப்பும் தொகைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அது தொடர்ந்து இலவசமாக இருக்கும். வணிகப் பரிவர்த்தனையின்போது, ஒருவேளை, கட்டணம் விதிக்கப்பட்டாலும், அதனை நுகர்வோர் செலுத்த தேவையில்லை, வணிகர்கள்தான் செலுத்த வேண்டியது இருக்கும் என்றும் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





