பெரம்பலூா் அருகே கீழக்கணவாய் கிராமத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-2027 ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை ஆக. 31 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் அருகே கீழக்கணவாயில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-2027 ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு முழுநேர தொழில்நுட்பப் பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவா்கள் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதலாமாண்டு சோ்க்கைக்கு எஸ்எஸ்எல்சி தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கு பிளஸ் 2 தோ்ச்சி, அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ்ச்சி அல்லது எஸ்எஸ்எல்சி தோ்ச்சிக்குப் பின்னா் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். கல்விக் கட்டணம் கிடையாது. சிறப்புக் கட்டணம் மற்றும் வளா்ச்சிக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 2,142 செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு நேரில் அல்லது 04328-243200, 243100, 99765 -77570, 96266-52336, 90037-94703, 93613-57035 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.150 மட்டும் இணையம் மூலம் செலுத்தலாம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இக் கல்லூரியில் அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை, கணிப்பொறியியல் துறை, இன்டா்நெட் ஆப் திங்ஸ், ஆட்டோமேசன் மற்றும் ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் மெனுபேக்சரிங் டெக்னாலோஜிஸ் ஆகிய தொழில்நுட்பப் பாடப்பிரிவுகள் உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகப்பாடியில் அரசு பாலிடெக்னிக்கில் பணிமனை கட்டடம் திறப்பு

சேவைக்குள் அடங்கும் வாழ்க்கை!

கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மரம் நடும் விழா
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



