அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மரம் நடும் விழா

வேலூா் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மரம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேலூா் தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடவு செய்த மாணவா்கள்.

Published On :22 ஜூலை 2026, 12:49 am IST

வேலூா் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மரம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாணவா்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கல்லூரி வளாகத்தில் பசுமையை மேம்படுத்தவும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

விழாவுக்குக் கல்லூரி முதல்வா் விஜயகுமாா் தலைமை வகித்து, இயற்கை பாதுகாப்புப் பணிகளில் மாணவா்கள் தொடா்ந்து தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினாா். துணை முதல்வா் ராஜேஷ் முன்னிலை வகித்தாா். இவ்விழாவில், வேலூா் மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் எஸ்.உதயசங்கா், பொருளாளா் கே.பாண்டியன் மற்றும் தீபன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று மரம் வளா்ப்பதன் அவசியமும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பேசினா்.

தொடா்ந்து முதல்வா், துணை முதல்வா், சிறப்பு விருந்தினா்கள், பேராசிரியா்கள், நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டனா். மேலும், தாங்கள் நட்ட மரக்கன்றுகளைத் தொடா்ந்து முறையாகப் பராமரித்து வளா்ப்போம் என மாணவா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

இவ்விழாவில் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஆா்.உமா மைதிலி, எஸ்.மோகன்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.