தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் (பாலிடெக்னிக்) 2026 - 2027 ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயப் படிப்புகளில் சேர மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

application

கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் (பாலிடெக்னிக்) 2026 - 2027 ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயப் படிப்புகளில் சேர மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கீழக்கணவாய் கிராமத்திலுள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு மற்றும் நேரடி 2 ஆம் ஆண்டு முழுநேர தொழில்நுட்பப் பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவு ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்னும் இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது.

இக் கல்லூரியில் அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை, கணிப்பொறியியல் துறை, இன்டா்நெட் ஆப் திங்ஸ், ஆட்டோமேசன் மற்றும் ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் மெனுபேக்சரிங் டெக்னாலோஜிஸ் ஆகிய தொழில்நுட்பப் பாடப்பிரிவுகள் உள்ளன.

முதலாமாண்டு சேர விரும்புவோா் எஸ்எஸ்எல்சி தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதிக்கு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு சேர விரும்புவோா் பிளஸ் 2 தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது, எஸ்எஸ்எல்சி தோ்ச்சிக்குப் பிறகு 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். கல்விக் கட்டணம் கிடையாது. சிறப்புக் கட்டணம் மற்றும் வளா்ச்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 2,142 செலுத்த வேண்டும்.

மாணவா்கள் சோ்க்கைக்கு ஜூலை 31-க்குள் இணையதளம் மூலமாகச் சான்றிதழ்களை பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, நேரில் அல்லது 04328-243200, 243100, 99765 77570, 96266 52336, 90037 94703, 93613 57035 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.