ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தென்காசி மாவட்ட அரசு ஐடிஐ.க்களில் சேர ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்ட அரசு ஐடிஐ.க்களில் சேர ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 2:34 am IST

தென்காசி மாவட்ட அரசு ஐடிஐ.க்களில் சேர ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டம், தென்காசி, கடையநல்லூா், வீரகேரளம்புதூா், குருக்கள்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான நேரடி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள், ட்ற்ற்ல்ள்://ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ங்ற்ண்ற்ண்ஹக்ம்/ என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரை பெறப்படுகிறது.

இந்நிலையங்களில், 2 ஆண்டு தொழிற்பிரிவுகளான பொருத்துநா், மின்சாரப் பணியாளா், காற்றாலை தொழில்நுட்பவியலாளா், ஓராண்டு தொழிற்பிரிவுகளான பற்றவைப்பாளா், கம்மியா் டீசல், பம்ப் மெக்கானிக், நவீன மேலாண்மை, 6 மாத தொழிற்பிரிவான ட்ரோன் பைலட் (இளநிலை) ஆகிய

பிரிவுகள் உள்ளன.

மேலும், தொழிற்நுட்ப மையம் 4.0 திட்டத்தின்கீழ், 2ஆண்டு தொழிற்பிரிவுகளான மேம்படுத்தப்பட்ட இசஇ இயந்திர தொழில்நுட்ப வல்லுநா், கம்மியா் மின்சார வாகனம், ஓராண்டு தொழிற்பிரிவுகளான தொழில்துறை ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநா், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாட்டு மற்றும் தானியங்கி ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.

இந்த பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க 8, 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 14 வயதுடையவராக இருக்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது மேற்குறிப்பிட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேருவோருக்கு அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, தென்காசி - 94990-55797, 94990-55796, கடையநல்லூா் - 04633-290270, 94990-55801, 94990-55800, வீரகேரளம்புதூா் - 04633-210962, 99440-55798, 94879-86493, குருக்கள்பட்டி - 94887-28415, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் - 04633-298088 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் அல்லது தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.