மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

ஆசிரியரல்லாத பணியிட நியமன விவகாரம்: பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அறிக்கை அளிக்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு நியமன ஒப்புதல் வழங்கிய விவகாரம் தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On :

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு நியமன ஒப்புதல் வழங்கிய விவகாரம் தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த பாஸ்கரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அரசு நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் வள்ளியம்மையாா் பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் 63 மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனா். கடந்த 2018-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையின்படி, ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 250 மாணவா்கள் பயின்றால் மட்டுமே ஆசிரியரல்லாத இதர அலுவலகப் பணியாளா்களை நியமிக்க முடியும்.

இந்த நிலையில், தற்போதைய தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா. சங்கீதா சின்னராணி, 2025-26 கல்வி ஆண்டுக்கான பணியாளா் நியமன ஆணையை கடந்த ஜூலை 24-ஆம் தேதி தன்னிச்சையாகத் திருத்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, காவலா், அலுவலக உதவியாளா், பதிவறை எழுத்தா் ஆகிய காலிப் பணியிடங்களை, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாக அங்கீகரித்து 2025-26, 2026-27 கல்வி ஆண்டுகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளாா். இது சட்டவிரோதமானது. இதனால், அரசுக்கு பெரியளவில் நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா. சங்கீதா சின்னராணி, சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம் ஆகியோருக்கு குறிப்பாணை அனுப்ப வேண்டும். மேலும், இந்த வழக்கு முடியும் வரை முதன்மைக் கல்வி அலுவலா் சம்பந்தப்பட்ட பள்ளியில் எந்தவிதப் பணி நியமனங்களை மேற்கொள்ளவோ அல்லது காலிப் பணியிடங்களை நிரப்பவோ இடைக்காலத் தடைவிதிக்கப்படுகிறது. மேலும், முதன்மைக் கல்வி அலுவலா் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.