பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: வழக்குப் பதிவு!
கோவை பெரியார் அறிவுலகத்துக்கான நூல் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

பெரியார் அறிவுலகம்
கோவை பெரியார் அறிவுலகத்துக்கான நூல் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேட்டில் இன்னும் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பிய நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், தவறு செய்த ஒருவரைக்கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே நூல் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கோவையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்காக நூல்கள் தேர்வு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டதில், தகுதியற்ற போலி புத்தகங்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள், போலி நூலாசிரியர்கள் மற்றும் போலியான பதிப்பகங்கள் வாயிலாகப் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பெரியார் அறிவுலக நூலக வளாகம், பொது நூலகத்துறை சார்ந்த அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, கொள்முதல் குழுவில் இடம்பெற்றிருந்த முக்கிய நபர்களுக்கு நேரில் ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Irregularities in the procurement of books for the Periyar intellectual sphere: Case registered
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


