பெரியார் அறிவுலக ஊழல்! ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? உயர்நீதிமன்றம் காட்டம்!
பெரியார் அறிவுலக ஊழல் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி...

மதுரை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேட்டில் தவறு செய்த ஒருவரைக்கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையா என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நூலகங்களுக்கு புத்தக கொள்முதல் தொடர்பான உத்தரவை முறைப்படி செயல்படுத்தவில்லை என்று கூறி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்க பரிந்துரைத்தது யார்? என்று கேள்வி எழுப்பியதோடு, அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனே முடக்க உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யார் எனத் தெரியாவிட்டாலும், இன்னும் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் இன்று ஆஜரான அரசு வழக்கறிஞர், 112 பேர் கொண்ட பரிந்துரைக் குழுவே புத்தகத்தை பரிந்துரைத்ததாகவும், வருகின்ற நவ. 16 ஆம் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்துவிடுவோம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், புத்தக கொள்முதல் விவகாரத்தில் பரிந்துரைக் குழுவையே குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல. இதுவரை குற்றம் செய்த ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், புத்தகம் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Summary
Periyar Arivulaga corruption - Can't find one? High Court

அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

