தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!
தமிழ்நாட்டுக்கு விடுக்கப்பட்ட மஞ்சள் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது பற்றி...
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் - DIN
தமிழ்நாட்டில் நாளை (நவ. 19) கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக்வான் புயலாக வலுப்பெற்றது.
இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், முழுமையாக வட ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
முன்னதாக, தெற்கு ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நெல்லூர் - விசாகப்பட்டினம் இடையே அக்வான் புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டுக்கு விடுக்கப்பட்ட மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றது.
மேலும், தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை மட்டுமே பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
No heavy rain in Tamil Nadu tomorrow! Yellow alert withdrawn!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


