செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

'அக்வான்' புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'அக்வான்' புயல் தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது தொடர்பாக...

Cyclone 'Akwan' into a severe cyclonic storm

'அக்வான்' புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது - Cyclone

Updated On :

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'அக்வான்' புயல் தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அக்வான் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள அக்வான் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நவம்பா் 17-ஆம் தேதி மாலை தீவிரப் புயலாகவும், நவம்பா் 19-ஆம் தேதி அதிகாலை அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடா்ந்து வடமேற்கு திசையில் நகரும் புயல், நவம்பா் 20-ஆம் தேதி நண்பகல் அளவில் ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் நெல்லூா் - இடையே யானம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'அக்வான்' புயல் தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 3 கி.மீ. என்ற வேகத்தில் நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது.

தொடர்ந்து வரும் 20-ஆம் தேதி நண்பகல் ஆந்திரம் மாநிலம் நெல்லுருக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும்போது, அதிகபட்சமாக மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை (நவ.18) தொடங்கி நான்கு நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

புயலின்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே, மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

According to the revised forecast by the India Meteorological Department (IMD), Cyclone Akvan will now cross Andhra Pradesh-Yanam coasts between Nellore and Visakhapatnam around November 20 noon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.