
இரட்டையர் டென்னிஸ்: பதக்க வாய்ப்பை இழந்த தமிழக வீரர்கள்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த தமிழக டென்னிஸ் வீரர்கள் குறித்து...

தமிழக டென்னிஸ் வீரர்கள் - படம்: எக்ஸ் / சாய் மீடியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக டென்னிஸ் வீரர்கள் அனிருத் சந்திரசேகர் - என். ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் காலிறுதியில் தோல்வியுற்று, பதக்க வாய்ப்பை இழந்தார்கள்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
டென்னிஸ் ஆடவர் இரட்டையர் காலிறுதியில் இந்திய வீரர்கள் அனிருத் சந்திரசேகர் - என். ஸ்ரீராம் பாலாஜி உடன் சீனாவின் பியூமின் ஜியாங் & டிஅன்ஹுய் ஜாங் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் தமிழக வீரர்கள் 1-2 (6-7(4), 7-6(7), 8-10) என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்கள். இதன் மூலம் தமிழக வீரர்கள் பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்கள்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் அசத்தி வரும் நிலையில், நல்லதொரு வாய்ப்பை அனிருத் சந்திரசேகர் - என். ஸ்ரீராம் பாலாஜி இழந்துள்ளார்கள்.
குறிப்பாக தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஆசிய விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இந்திய அணி இதுவரை 59 பதக்கங்களை வென்றுள்ளன.
Asian Games 2026 | Tennis
— SAI Media (@Media_SAI) September 30, 2026
Menâs Doubles â Quarterfinal
The Indian pair of Anirudh Chandrasekar (TAGG Athlete) and N. Sriram Balaji (TAGG Athlete) fought till the very end against Fumin Jiang and Tianhui Zhang of China, before going down 1â2.
Set Scores: 7â6(7), 6â7(7), [8â10]⦠pic.twitter.com/YEtpV4Tt1A
Summary
Anirudh Chandrasekar & N. Sriram Balaji go down 1–2 to China Men’s Doubles Quarter final at Asian Games 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






