காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

துப்பாக்கி சுடுதல்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதைப் பற்றி...

நீரு, ஆஷிமா அஹலாவத் மற்றும் மனிஷா கீர்.

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா, சீனா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் இந்தியாவின் நீரு, ஆஷிமா அஹலாவத் மற்றும் மனிஷா கீர் கூட்டணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

சீன கூட்டணி 346 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், இந்திய கூட்டணி 328 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும், குவைத் மூவர் அணி 325 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

நீரு 125-க்கு 118 புள்ளிகளையும் ஆஷிமா மற்றும் மனிஷா முறையே 125-க்கு 106 மற்றும் 104 புள்ளிகளையும் பெற்றனர்.

இந்திய குழுவினர் 4 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தமாக 46 பதக்கங்களை வென்று 12-ஆவது இடத்தில் உள்ளனர்.

Summary

The Indian women's shooting team of Neeru, Aashima Ahlawat and Manisha Keer clinched the silver medal in the women's trap team event at the Asian Games 2026 in Japan on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.