ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஆசிய விளையாட்டு: 400 மீ. தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

ஆசிய விளையாட்டுத் தொடரில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

Asian Games 2026

தொடர் ஓட்ட வீரர், வீராங்கனைகள் - ஏஎன்ஐ

Published On :

ஆசிய விளையாட்டுத் தொடரில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்திய வீரர் வீராங்கனைகளான மாசெட்டிரா பூவம்மா, விஷால் தென்னரசு, ராம்ராஜ் வைத்யா, தெக்கினாலில் மனு ஆகியோர் சிறப்பான வியட்நாம் அணியை விட சிறப்பான பங்களிப்பை அளித்ததைத் தொடர்ந்து பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 செப். 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

இதில், இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

5வது நாளான இன்று, கலப்புப் பிரிவில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் வீராங்கனைகள் மாசெட்டிரா பூவம்மா, தெக்கினாலில் மனுவும் வீரர்களான விஷால் தென்னரசு, ராம்ராஜ் வைத்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியில், 3:14.54 விநாடிகளில் நால்வரும் இலக்கை எட்டி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். முதலிடத்தை 3:12.87 விநாடிகளில் கடந்து பஹ்ரைன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது.

0.08 விநாடிகளில் பின் தங்கியதால் வியட்நாம் அணி வெண்கலத்துடன் திரும்பியது.

Summary

Asian Games 2026 India bags Silver Medal in mixed relay 400 meters

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.