
‘போல் வால்ட்’-ல் வெண்கலம்... தமிழகத்தின் பரணிகா இளங்கோவன் வரலாற்றுச் சாதனை!
ஆசிய விளையாட்டுப் போட்டியின் கம்பு ஊன்றி தாண்டுதல் (போல் வால்ட்) போட்டியில் வெண்கலம் வென்ற பரணிகா இளங்கோவனை பற்றி...
பரணிகா இளங்கோவன்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் கம்பு ஊன்றி தாண்டுதல் (போல் வால்ட்) போட்டியில் தமிழ்நாட்டின் பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20-ஆவது தொடர் ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பரணிகா இளங்கோவன்.
இந்தத் தொடரில் கம்பு ஊன்றி தாண்டுதல் (போல் வால்ட்) போட்டி பலோமா மிசுஹோ திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை பரணிகா இளங்கோவன் 4.15 மீட்டர் உயரம் தாண்டி கஜகஸ்தானின் போலினா இவனோவாவுடன் வெண்கலப் பதக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான பரணிகா, பெண்களுக்கான போல் வால்ட் பிரிவில் ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
Summary
Asian Games 2026: Tamil Nadu athlete Baranica Elangovan secures Historic Bronze in Pole Vault
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






