
100 மீ. தடகளத்தில் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டு இந்தியர்கள்..! பதக்கம் வெல்லுவார்களா?
ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளத்தில் இரண்டு இந்தியர்கள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறித்து...

குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர் - படங்கள்: எக்ஸ் / சாய் மீடியா
ஆசிய விளையாட்டுப் போட்டி 100 மீட்டர் தடகளத்தில் குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர் ஆகிய இரண்டு இந்தியர்கள் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்கள்.
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி வருகின்றன. இந்திய அணி இதுவரை 15 பதக்கங்கள் (1 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம்) வென்றுள்ளது.
ஆடவருக்கான 100 மீட்டர் தடகளத்தில் இந்திய வீரர் குரிந்தர்வீர் சிங் ஹீட் 4 குரூப்பில் 10.38 விநாடிகளில் கடந்து இரண்டாம் பிடித்து, அரையிறுதிக்குத் தேர்வானார்.
மற்றுமொரு இந்தியரான அனிமேஷ் குஜூர் 100 மீட்டர் தடகளத்தில் 10.36 விநாடிகளில் ஹீட் 1 குரூப்பில் மூன்றாமிடம் பிடித்து, அரையிறுதிக்குத் தேர்வானார்.
மொத்தமாக ஹீட் 1,2,3,4 குரூப்புகளில் இருந்து டாப் 3 வீரர்கள் அரையிறுதிக்குத் தேர்வாகுவார்கள். மீதம் 6 பேர் எல்லா குரூப்புகளில் இருந்தும் குறைவான நேரத்தில் ஓடியவர்கள் என மொத்தமாக 24 பேர் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
ஹீட் 1, 2,3 என மொத்தம் 3 குரூப்புகளாக 24 பேர் பங்கேற்பார்கள். இதில் டாப் 2 இடம் பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். கூடுதலாக இருக்கும் இருவர் அந்த குரூப்பில் குறைவான நேரத்தில் ஓடியவர்களில் இருந்து தேர்வாகுவார்கள்.
இறுதிப் போட்டியில், மொத்தமாக எட்டு பேர் கலந்துகொண்டு பதக்க வெல்ல போட்டியிடுவார்கள். இந்தியர்கள் இருவருமே பதக்கம் வெல்ல வேண்டுமென ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
SPEED. POWER. SEMI-FINALS! ð®ð³
— SAI Media (@Media_SAI) September 24, 2026
Indiaâs sprint charge is ON at #AsianGames2026!
Animesh Kujur (TOPS Development) clocked 10.36s to finish 3rd in Heat 1 and qualify for the Menâs 100m Semi-Final!
Gurindervir Singh (TOPS Development) stormed through in 10.38s, finishing 2nd in⦠pic.twitter.com/XpZiXvfHye
Summary
Aichi-Nagoya Asian Games 2026: Animesh Kujur, Gurindervir Singh Qualifies For SemiFinals In Men’s 100M
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







