9/9: நடப்பு சீசனில் தோல்வியே சந்திக்காத பார்சிலோனா..! லமின் யமால் ஆட்ட நாயகன்!
லா லிகா தொடரில் அபார வெற்றி பெற்ற பார்சிலோனா குறித்து...

கோல் அடித்த மகிழ்ச்சியில் லமின் யமால் - படம்: ஏபி
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்துத் தொடரில் பார்சிலோனா எஃப்சி அணி ரியல் பெட்டிஸ் உடன் நேற்றிரவு மோதியது.
இந்தப் போட்டியில் பார்சிலோனா 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பார்சிலோனாவின் லமின் யமால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ரியல் பெட்டிஸ் அணி தனது சொந்த மண்ணில் பார்சிலோனா உடன் மோதியது. இந்தப் போட்டியில் 10ஆவது நிமிஷத்தில் லமின் யமால் கோல் அடித்து கணக்கை தொடங்கி வைத்தார்.
பின்னர் 27ஆவது நிமிஷத்தில் பெடிஸ் அணியின் கோம்ஸ் கோல் அடித்து சமன்படுத்தினார். 41ஆவது நிமிஷத்தில் ரோட்ரி கோல் அடித்தார். பார்சிலோனாவில் இதுதான் அவரது முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாதியில் பார்சிலோனா 2-1 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் 51ஆவது நிமிஷத்தில் பார்சிலோனாவின் கேப்ரியல் ஜீசஸ் கோல் அடிக்க, 53ஆவது நிமிஷத்தில் அப்தே எஸ்ஸல்சௌலி கோல் அடித்து 2-3 என ரியல் பெட்டிஸை முன்னகர்த்தினார்.
அடுத்ததாக 62, 81ஆவது நிமிஷத்தில் எரிக் கார்சியா, டேனி ஒல்மா கோல் அடித்து அசத்தினார்கள். இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. இத்துடன் 9 போட்டிகளில் அனைத்துமே வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்தப் போட்டியில் ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்த லமின் யமால் ஆட்ட நாயகன் விருது வென்றார். தடுப்பாட்டக்காரரான பௌ குபார்ஸி இந்தப் போட்டியில் இரண்டு அசிஸ்ட்டுகளை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
â Elche 0-5 FC Barcelona
— FC Barcelona (@FCBarcelona) October 17, 2026
â FC Barcelona 2-0 Athletic Club
â FC Barcelona 5-2 Rayo Vallecano
â Valencia 0-5 FC Barcelona
â FC Barcelona 5-1 Feyenoord
â Levante 2-4 FC Barcelona
â FC Barcelona 7-2 Racing
â Sevilla 1-3 FC Barcelona
â FC Barcelona 3-0 Getafe
â Galatasarayâ¦
Summary
Lamine Yamal named Man of the Match in Betis vs Barcelona
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


