ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

லமின் யமால் மேஜிக்: சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அபார வெற்றி பெற்ற பார்சிலோனா குறித்து...

Barcelona's Fermin Lopez, left, celebrates with teammate Lamine Yamal after scoring their side's second goal during the Champions League opening phase soccer match between Galatasaray and Barcelona in Istanbul, Turkey, Tuesday, Oct. 13, 2026. (AP Photo/Khalil Hamra)

கோல் அடித்த மகிழ்ச்சியில் பார்சிலோனா வீரர்கள். - படம்: ஏபி

Updated On :

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா அணி இரண்டாம் பாதியில் கம்பேக் அளித்து 4-1 என துருக்கிய அணியான கலாடாசரே அணியை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அசத்திய பார்சிலோனாவின் இளம் வீரர் லமின் யமால் ஆட்ட நாயகன் விருது வென்றார். போட்டிக்கு முன்பாக எதிரணி வீரர் இவரை யாரென்றே தெரியாது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் தொடக்கத்தில் கலாடாசரே அணியின் வீரர் அலெக்ஸி பட்ரகாவோ 28ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். முதல் பாதியின் இறுதியில் ஜாவோ கன்சிலோ 43ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்.

இரண்டாம் பாதியில் கம்பேக் அளித்த பார்சிலோனா அணி 50, 53, 65ஆவது நிமிஷங்களில் முறையே ஃபெர்மின் லோபஸ், ல்அந்தோனி கார்டன், கரிம் அடேயமி ஆகியோர் கோல் அடித்து அசத்தினார்கள்.

இந்தப் போட்டியில் லமின் யமால் 2 அசிஸ்ட் செய்து அசத்தினார். மேலும் பந்தை லாவகமாக எதிரணியிடம் இருந்து, சொந்த அணி வீரர்களுக்குக் கடத்தினார்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக லமின் யமால் தேர்வானார். போட்டிக்கு முன்பாக யமாலை விமர்சித்த வீரருக்கு பார்சிலோனா ரசிகர்கள் தங்களது பதிலை சமூக வலைதளத்தின் மூலமாக காண்பித்து வருகிறார்கள்.

Summary

Lamine Yamal magic helps Barcelona beat Galatasaray in Champions League

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.