சிறந்த பந்துவீச்சாளர்களின் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த ஜோஷ் ஹேசில்வுட்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஷ் ஹேசில்வுட் குறித்து...

ஜோஷ் ஹேசில்வுட் - படம்: ஏபி
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் புதிய சாதனை படைத்துள்ளார். அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டாப் 5ல் இடம் பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஹேசில்வுட் இரண்டாவது இன்னிங்ஸில் தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த விளையாட்டை விளையாடினார். 6 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
இதன் மூலம் அதிகமாக 5 விக்கெட்டுகள் எடுத்த, தற்போது விளையாடும் வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் டாப் 5ல் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் மிட்செல் ஸ்டார்க் இருக்கிறார்.
அதிகமாக 5 விக்கெட்டுகள் எடுத்தவர்கள்
1. மிட்செல் ஸ்டார்க் - 19 முறை
2. ககிசோ ரபாடா - 17 முறை
3. ஜஸ்பிரீத் பும்ரா - 16 முறை
4. ஜோஷ் ஹேசில்வுட் - 15 முறை
5. பாட் கம்மின்ஸ் - 14 முறை
6. கெமர் ரோச் - 11 முறை
Summary
Josh Hazlewood climbs to fourth on the most fifers in test cricket current fast bowlers list!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


