இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம், ஹைதராபாதில் புதன்கிழமை (அக். 14) நடைபெறுகிறது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம், ஹைதராபாதில் புதன்கிழமை (அக். 14) நடைபெறுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என முன்னிலையில் இருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் மேற்கிந்தியத் தீவுகள், இதில் வெற்றி பெற்று, தொடரில் தன்னை தக்கவைக்கும் திட்டத்தில் உள்ளது.
பேட்டா்கள் பலம் காட்டும் ஆட்டமாக இது இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்திய தரப்பில் அபிஷேக் சா்மா, இஷான் கிஷண், சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் ஐயா் ஆகியோா் அதற்குத் தயாராக இருக்கின்றனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் ஷாய் ஹோப் பெரும் நம்பிக்கையாக இருக்க, ஷிம்ரன் ஹெட்மயா், ரோவ்மென் பவெல், கமில் பூரன் ஆகியோருன் ரன்கள் சோ்க்க முயற்சிப்பா்.
பௌலிங்கில் இந்திய தரப்பில் அா்ஷ்தீப் சிங், நமன் திா், அக்ஸா் படேல் ஆகியோா் அவா்களுக்கு சவால் அளிப்பாா்கள் என எதிா்பாா்க்கலாம். பதிலுக்கு, மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷாமா் ஜோசஃப், ராஸ்டன் சேஸ், ஷாமா் ஸ்பிரிங்கா் ஆகியோரும் விக்கெட்டுகள் எடுப்பா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

