தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்நேற்று அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?திருப்பரங்குன்றம் தூணில் தீபம்! வழிகாட்டுதல் குழுவில் ஆட்சியர்!திருப்பரங்குன்றத்தில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! நீதிபதிகள் அறிவிப்புதிடீரென அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி இல்லை; நாளை வாருங்கள்! சிஆர்பிஎஃப் அதிகாரி வேண்டுகோள்பெரியார் அறிவுலக வழக்கு: அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன் என்பது குறித்து தயாநிதி மாறன் விளக்கம் கொடுத்துள்ளார்.

<P>08/02/2023 - DELHI: DMK MP Dayanidhi Maran at Parliament House complex during Budget Session, in New Delhi - PTI Photos. [Nation, DMK, MPs, Dayanid

தயாநிதி மாறன் - ENS

Updated On :

திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டு அறிமுகப்படுத்தும் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாக புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதால் மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பதாக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இன்று நடந்த எம்.பி.க்கள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த, அக்கட்சியின் எம்.பி. தயாநிதி மாறன் கூறுகையில், தமிழ்நாடும் பிற தென்னிந்திய மாநிலங்களும் குடும்பக் கட்டுப்பாட்டு முறை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மிகவும் பொறுப்புடன் கடைப்பிடித்துள்ளன.

எனவேதான் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் உள்ளது; இதற்காக நாங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் வாதம்.

திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், எங்கள் முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது போல, திமுக நியாயமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறது.

தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவற்றின் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படக் கூடாது. அதே வேளையில், குடும்பக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றாத உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில், அதிகாரச் சமநிலையைப் பாதிக்கும் வகையில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது.

திமுக முன்வைத்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது; அதாவது, அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம், மாநிலங்களுக்கிடையேயான இடங்களின் விகிதாச்சாரம் மாறாமல், தற்போதைய நிலையே நீடிக்கிறது.

மேலும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வரவிருப்பது ஒரு சாதகமான அம்சம்; இதை திமுக ஆதரிக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தியாவில் முதன்முதலில் நடைமுறைப்படுத்திய கட்சி திமுகதான். நாங்கள் எப்போதும் இதை ஆதரித்து வந்திருப்பதால், இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.

Summary

Why does the DMK support the delimitation of constituencies? Dayanidhi Maran explains

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.