திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: நாளை (நவ. 28) திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பு அமர்வையொட்டி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை (நவ. 28) நடைபெறும் என அறிவிப்பு...

DMK MPs meeting

திமுக எம்.பி.க்கள் கூட்டம் - கோப்புப் படம்

Updated On :

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் சிறப்பு அமர்வு நவ. 30 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை (நவ. 28) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் சிறப்பு அமர்வு நவ. 30 ஆம் தேதி கூடுகிறது.

நவ. 30 ஆம் தேதி மக்களவையும் டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவையும் கூடவுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமயில் நாளை (நவ. 28) காலை 10 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 28-11-2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது, திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Story image

முன்னதாக, தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் நிலைப்பாட்டில் பல்வேறு ஊகங்கள் எழுந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Parliament special Session: DMK MPs meeting tomorrow Nov. 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.