121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!
திருப்பதி ஏழுமலையனுக்கு காணிக்கை கொடுப்பதில் வரலாறு படைத்த சென்னை தம்பதி பற்றிய தகவல்கள்...

திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 121 கிலோ தங்க, வைர நகைகள்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, சென்னையைச் சோ்ந்த ஸ்ரீ வா்த்தமான் ஜெயின் மற்றும் ராதிகா ஜெயின் தம்பதி ஏழுமலையானுக்கு ரூ. 207 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை நன்கொடையாக வழங்கினா்.
இந்த நன்கொடையானது நகைகளின் மதிப்பையும் தாண்டி, அதற்குப் பின்னால் சென்னை தம்பதி, திருப்பதி ஏழுமலையான் மீது கொண்டிருந்த பக்தி மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் தனித்து நிற்பதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.
திருப்பதியில் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த தம்பதி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) பிரதிநிதிகளிடம் இந்த மதிப்புமிக்க தங்க ஆபரணங்களை வழங்கினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இவ்வளவு பெரிய நன்கொடை அளிக்கப்பட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ள அதே வேளையில், ஸ்ரீ வா்த்தமான் ஜெயின் யார் என்ன தொழில் செய்கிறார் என்ற தகவல்களும் கிடைத்துள்ளன.
ஸ்ரீவர்த்தமான் ஜெயின் சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் வெளிப்பணிக்கு ஆள்களை அமர்த்தும் (outsourcing) நிறுவனங்களை நடத்தி வருவதும், இது மட்டுமல்லாது பல்வேறு சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் அவர் பங்காற்றியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஆசியா இன்ஜினியரிங் இணையதளத்தின்படி, ஸ்ரீ வர்தமானுக்கு பெருநிறுவன மேம்பாடு, வியூகத் திட்டமிடல், இணைப்பு மற்றும் கையகப்படுத்தல், நிர்வாகத் தலைமைத்துவம் மற்றும் பெரிய அளவிலான பிபிஓ செயல்பாடுகளை வழிநடத்துதல் ஆகியவற்றில் பரந்த அனுபவம் உள்ளது என்றும், சுகாதார தொழில்நுட்ப பணிகளில், சில முக்கிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையையும் பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்பை வழங்குவதில் கவனம் செலுத்தும் திறன் மேம்பாட்டு அமைப்பான ஆவிஷ்காரின் நிறுவனர் ஸ்ரீவர்த்தமான்.
மேலும், இந்தியாவில் பல புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கி நிதியுதவி அளிக்கும் சென்னை ஏஞ்சல்ஸ் அமைப்பிலும் இவர் உறுப்பினராக உள்ளார்.
தன்னுடைய சொந்த தொழிலிலும், சமூக நல மேம்பாட்டுப் பணிகளிலும் ஸ்ரீவர்த்தமான் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலராகப் பணியாற்றி, நலிவடைந்த குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளுக்கு ஆதரவளித்து வருகிறார்.
ஆபரணங்கள் குறித்த விவரங்கள்:
திருமலை கோயிலுக்காக, 33 வகைகளைச் சோ்ந்த மொத்தம் 46 தங்க ஆபரணங்களைத் தயாரிப்பதற்கு 121 கிலோ (24 காரட்) தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தயாரிப்புச் செலவுகள் உட்பட, இந்த 121 கிலோ தங்க ஆபரணங்களின் மொத்த மதிப்பு ரூ. 207.6 கோடியாகும்.
திருமலை கோயிலின் ஆபரணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தங்கம் - 106 கிலோ (24 காரட்) திருச்சானூா் கோயிலில் பத்மாவதி தாயாா் வஸ்திரம் தயாரிப்பதற்கு இருப்பு தங்கம்-15 கிலோ (24 காரட்) பயன்படுத்தப்படும்.
ஆபரண நன்கொடையில் உள்ள நகைகளின் விவரங்கள்:
வைரங்களின் மொத்த எடை - 238.2 சி.டி
விலையுயா்ந்த கற்கள்-2,247.7 சி.டி
நீல சபையா்கள்-91.6 சி.டி
மஞ்சள் சபையா்கள்-84.2 சி.டி
மாணிக்கங்கள் மற்றும் மரகதங்கள்-2,916.5 கிராம்
சாலிகிராமம் கற்கள்
நகைகளின் பட்டியல்:
பாத கவசம்-2
கால்கோல்கள்-2
போகடா -01
துளசி இலை மாலை- 1
அஷ்டோத்தர ஷதநாம தங்க காசு ஆரம் - 1
சதுா்பூஜ லக்ஷ்மி ஆரம் - 1
புலி நகம் பதக்கம் - 1
அஷ்டோத்தர இலை ஆரம் - 1
கழுத்தணிகள் - 1
ஒட்டியாணம்- 1
தங்க கழுத்து ஆபரணம் - 1
தங்க மலா்- 1
வைஷ்ணவம் - 01
மொளச்சேயி - 01
வெள்ளி பூணூல்- 1
நாகாபரண ஒட்டியாணம்- 1
சங்கிலி - 01
அபயஹஸ்த கை காப்புகள் (கை வளையல்கள்) - 5
சந்தனவங்க காந்தி (சோக்கா்) - 1
வைகுண்ட அஸ்தம் (கை ஆபரணம்) - 1
கடி அஸ்தம் (கை ஆபரணம்) - 1
நாகாபரண கால் காப்புகள் - 2
நாகாபரணம் - 2
புஜகீா்த்திகள் (கவசங்கள்/தோள்பட்டை ஆபரணங்கள்) - 2
கா்ண பத்திரங்கள் (காதணிகள்) - 2
வங்கிகள்- 2
சாலிகிராம ஆரம் (நெக்லஸ்) - 2 (2 பாகங்கள்)
கமலால திரிபூஜ சாலிகிராம ஹரம்ஸ் (தாமரை மற்றும் முக்கோண சாலிகிராம நெக்லஸ்கள் - 2 (2 பாகங்கள்)
சீமா கவசங்கள் - 1
சங்கு கவசம் - 1
சக்ர கவசம் - 1
முத்து மணி ஆரம் - 1
கிரீடம் - 1.





பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

