ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!

ஆவடி மாநகராட்சியில், பொதுமக்கள் புகார்கள் மற்றும் பரிந்துரைகளை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்ய பிரத்யேக 'மொபைல் செயலி' ஒன்றை தயார் செய்ய ஆவடி மாநகராட்சி முடிவு செய்துள்ளதைப் பற்றி...

ஆவடி மாநகராட்சி.

Updated On :

ஆவடி மாநகராட்சியில், பொதுமக்கள் புகார்கள் மற்றும் பரிந்துரைகளை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்ய பிரத்யேக 'மொபைல் செயலி' ஒன்றை தயார் செய்ய ஆவடி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஆவடி மாநகராட்சியில், குப்பை, கழிவு நீர், மின்விளக்கு, குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு 044–26554440 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

அந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், புகார் கொடுத்ததற்கு ஆதாரமும், புகார்கள் சரி செய்யப்பட்டது பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், தற்போது உள்ள டிஜிட்டல் சூழலுக்கு ஏற்றவாறு, பொதுமக்கள் ஆன்லைனில் புகார்களை தெரிவிக்க ஆவடி மாநகராட்சிக்கு பிரத்யேகமாக 'மொபைல் செயலி' ஒன்றை தயார் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, பொதுமக்கள் புகார்கள் மற்றும் பரிந்துரைகளை பதிவு செய்ய பிரத்யேகமாக 'மொபைல் செயலி' ஒன்றை தயார் செய்ய ஆவடி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து கமிஷனர் அம்பிகா ஜெயின் கூறுகையில், “மொபைல் செயலி உருவாக்குவது தொடர்பாக முதற்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதாவது யோசனைகள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். அதை நாங்கள் பரிசீலிப்போம்” என்றார்.

Summary

The Avadi Municipal Corporation has decided to develop a dedicated mobile application to allow the public to register their complaints and suggestions online.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.