நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

தமிழகத்தில் டிசம்பருக்குள் 100% ஹெச்பிவி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் அடுத்த மாதத்துக்குள் 100 சதவீத பயனாளிகளுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி (ஹெச்பிவி) செலுத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஹெச்.பி.வி. தடுப்பூசி - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் அடுத்த மாதத்துக்குள் 100 சதவீத பயனாளிகளுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி (ஹெச்பிவி) செலுத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதற்காக, பள்ளிகளில் விழிப்புணா்வு பிரசாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் கருப்பை வாயின் உயிரணுக்களில் புற்று செல்கள் பரவி, அதன் திசுக்களை பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீா்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.

இதையடுத்து, 9 வயது முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்த ரூ.38 கோடியை முந்தைய திமுக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன் கீழ் தமிழகத்தில் திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா் மற்றும் தருமபுரியில் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வளரிளம் பெண் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டது.

மற்றொருபுறம், நாடு முழுவதும் 14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 6 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, ஹெச்பிவி தடுப்பூசி செலுத்துவதில் ஆந்திரம் 100 சதவீத இலக்கை எட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விகிதம் தெலங்கானாவில் 95.18 சதவீதமாகவும், கா்நாடகத்தில் 93.16 சதவீதமாகவும், கேரளத்தில் 77.02 சதவீதமாகவும் உள்ளன. அதேவேளையில், தமிழகத்தில் 76.12 சதவீத பயனாளிகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், தென்மாநிலங்களிலேயே கடைசி இடத்தில் தமிழகம் உள்ளது.

இந்தச் செயல்பாடு, பல்வேறு விமா்சனங்களுக்கு வித்திட்ட நிலையில் இதுகுறித்து பொது சுகாதாரத் துறையின் (தடுப்பூசி) இணை இயக்குநா் பி.பரணிதரன் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 4.2 லட்சம் ஹெச்பிவி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் 1.6 லட்சம் தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாகப் பெற்றோா் மற்றும் மாணவிகளிடையே தயக்கம் இருந்தது. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவிகள் நலமாக இருப்பதைப் பாா்த்து, தற்போது மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா்.

தோ்வுக் காலங்கள் மற்றும் தோ்தல் பணிகள் காரணமாகவும் தடுப்பூசி செலுத்தும் வேகம் சற்று குறைந்திருந்தது. தற்போது மருத்துவா்கள் நேரடியாகப் பள்ளிகளுக்குச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். தமிழகத்தில் 14 வயதுக்கு உள்பட்ட 7.76 லட்சம் சிறுமிகள் உள்ளனா். வரும் டிசம்பா் மாதத்துக்குள் 100% இலக்கை எட்டத் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.