அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! மலர்களால் அலங்காரம்!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!உச்ச நீதிமன்றம், நீங்கள் விளையாடும் கார் பொம்மைபோல அல்ல! இபிஎஸ் விமர்சனம்திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள்!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுகோவையில் பறவை காய்ச்சல்: முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்திருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கொப்பரை வைத்து தீபம் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது பற்றி..

மலை மேல் களிமண் கொண்டு செல்லும் ஊழியர்கள்

மலை மேல் களிமண் கொண்டு செல்லும் ஊழியர்கள் - dps

Updated On :

உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூண் பகுதியில் இன்று மாலை தீபம் ஏற்றப்படவிருக்கும் நிலையில், கொப்பரையில் ஏற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூனின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபம் ஏற்றுவதற்காக தூணை சுற்றிலும் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன் மேல் மேடை போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மேடைமேல் மக்கள் பார்க்கும் வண்ணம் பெரிய அளவிலான கொப்பரை வைத்து தீபம் ஏற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக காலையில் கோயில் நிர்வாகம் சார்பில் மலை மேல் களிமண் கொண்டு செல்லப்பட்டது. ஈரப்பதத்துடன் இருக்கும் களி மண்ணில் தாமிரக் கொப்பரையை நிற்க வைத்து அதன் மேல் தீபம் ஏற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக கோயில் ஊழியர்கள், மலை மேல் பக்கெட்டுகளில் களிமண் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

​திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்துவது மற்றும் திருக்கோயில் நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

​இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் விமானம் மூலம் சனிக்கிழமை காலை மதுரை வந்தடைந்தனர்.

தொடர்ந்து, மதுரை ரெசிடென்சி ஹோட்டலில் தங்கியுள்ள நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரை, திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானிக பட்டர்களான சுவாமிநாதன், ராஜா பட்டர் மற்றும் செல்லப்பா பட்டர் ஆகியோர் இந்து சமய அறநிலையத் துறை வாகனம் மூலம் அழைத்து வந்தனர். பிறகு தீபம் ஏற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

Summary

A lamp atop the Thiruparankundram hill! Plans to light it using a large cauldron!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.