இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

உச்ச நீதிமன்றம், நீங்கள் விளையாடும் கார் பொம்மைபோல அல்ல! இப்படி ஒரு அசிங்கம் தேவையா? இபிஎஸ் விமர்சனம்

திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது பற்றி எடப்பாடி பழனிசாமி பதிவு...

AIADMK Edappadi Palanisamy on thiruparankundram case

முதல்வர் விஜய் - எடப்பாடி பழனிசாமி. - கோப்புப் படம்

Updated On :

இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசை நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை என்று திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அறங்காவலா் குழு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் குழுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தது. மேலும், திருப்பரங்குன்றம் மலை, தீபத் தூண், தா்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சிஆா்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதுபற்றி இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,

"திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.

அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குன்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்.-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.

உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்-

“Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts” (நிர்வாகச் சீர்குலைவு, வெளிப்படையான மற்றும் திட்டமிட்ட கீழ்ப்படியாமை, அப்பட்டமான அலட்சியம், அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு எதிராகவே திட்டமிட்டுச் செய்யப்பட்ட அவமதிப்பு).

மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” (தற்போதைய சூழலை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டியது அவசியம்; இல்லையெனில், அது அரசியலமைப்புச் குழப்பத்திற்கு வழிவகுக்கக்கூடும்) என்று கூறியுள்ளது.

இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.

இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் வின்ட்மில் (காற்றாடி), கார் பொம்மைகளைப் போல அல்ல என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும்.

இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த தவெக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

EPS post on the Supreme Court stern rebuke to the TN govt in the Thiruparankundram case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.