திருப்பரங்குன்றத்தில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! நீதிபதிகள் அறிவிப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு...

திருப்பரங்குன்றத்தில் நீதிபதிகள்... - DNS
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று (நவ. 28) மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததால் இன்று (நவ. 28, சனிக்கிழமை) தூணில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் இன்று காலை திருப்பரங்குன்றம் வருகை தந்த நிலையில், தீபசட்டியுடன் ரதவீதியில் வலம் வந்தனர்.
இருவரும் தீபம் ஏற்றுவதற்கான உபகரணங்களை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு, தங்கும் விடுதிக்கு புறப்பட்டனர்.
மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படும்போது யார், யாருக்கெல்லாம் அனுமதி என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
Summary
A lamp will be lit on a pillar at the Tirupparankundram hill at 5 PM: Judges
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


