தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி இல்லை; நாளை வாருங்கள்! சிஆர்பிஎஃப் அதிகாரி வேண்டுகோள்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து சிஆர்பிஎஃப் அதிகாரி விக்ரம் விளக்கம்...
திருப்பரங்குன்றம் ... - DNS
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி கிடையாது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என சிஆர்பிஎப் அதிகாரி விக்ரம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பக்தர்களிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்த அவர், இன்று தீபத்தூண் பகுதிக்குச் செல்ல அனுமதிக்க முடியாது. நாளை கண்டிப்பாக வந்து தீபத்தூணைப் பார்வையிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, சிஆர்பிஎஃப் வீரர்கள் தீபத்தூண் பகுதியைப் பார்வையிடுவதற்காக மலைக்கு மேலே சென்றனர். இதனால் அப்பகுதியில் திரண்டிருந்த பக்தர்கள், காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Summary
No one is permitted in the Thiruparankundram Deepathoon area today: CRPF officer Vikram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

