கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

மறக்க முடியாத நாள்கள்... ஆதித்ய வர்மா புகைப்படங்களைப் பகிர்ந்த விக்ரம்!

நடிகர் விக்ரம் பகிர்ந்த புகைப்படங்கள்....

நடிகர்கள் விக்ரம், துருவ்

Updated On :

நடிகர் விக்ரம் தன் மகன் துருவ் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் துருவ் விக்ரம், பைசன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதில், நடிகர்கள் பிருத்விராஜ், சாய் தீனா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ரொமாண்டிக் - ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ஜாக்கி எனப் பெயரிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் இன்ஸ்டாகிராமில் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் படப்பிடிப்புப் புகைப்படங்களைப் பகிர்ந்து, “ஒரு அப்பா. ஒரு மகன். அவனின் முதல் திரைப்படம். கேமராவுக்குப் பின் மறக்க முடியாத நாள்கள். 7 ஆண்டுகளைக் கடந்தது ஆதித்ய வர்மா” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் தற்போது இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Actor Vikram has shared photos from the shoot of the film Adithya Varma, which stars his son Dhruv.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.