திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!

விக்ரம் பிரபுவின் சிட்டி ஆஃப் கோல்ட் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் “சிட்டி ஆஃப் கோல்ட்” படப்பிடிப்பு நிறைவு...

CITY OF GOLD

“சிட்டி ஆஃப் கோல்ட்” படப்பிடிப்பு நிறைவு... - Youtube

Updated On :

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் “சிட்டி ஆஃப் கோல்ட்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் 26 ஆவது திரைப்படம் “சிட்டி ஆஃப் கோல்ட்”. அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கும் இந்தப் படத்தை, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகர்கள் சிவாத்மிகா ராஜசேகர், ராகுல், அழகம்பெருமாள், இன்ஸ்டா பிரபலம் அமலா சாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் “சிட்டி ஆஃப் கோல்ட்” திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, இன்று (நவ. 20) படக்குழுவினர் சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இத்துடன், சிட்டி ஆஃப் கோல்ட் படம், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகின்றது.

ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “சிறை” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Filming for the movie "City of Gold," starring actor Vikram Prabhu, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.