ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு

எதுக்கு இந்த விளக்கமெல்லாம்... வெங்கட் பிரபுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதில்!

நடிகர் சிவகார்த்திகேயன் பதிவு வைரல்...

sivakarthikeyan and venkat prabhu

சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு. - கோப்புப்படம்

Published On :

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு பதிவுக்கு மறுமொழி அளித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்படம் நடக்காமல் தள்ளிச்சென்றபடியே இருந்தது. சேயோனுக்குப் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையே, அண்மையில் நேர்காணலில் பேசிய கங்கை அமரன், “ஒரு நடிகர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருந்தார். ஆனால், அந்த நடிகர் நடித்த படம் ஒன்று ஹிட் அடித்ததும் காத்திருக்க வைத்தார். அப்படத்திற்கு முன்பே கால்ஷீட் கொடுத்துவிட்டார். ஆனால், இப்படி செய்தது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர் காலை ஏன் நாம் பிடிக்க வேண்டும்? என வெங்கட் பிரபுவிடம் சொல்லி வேறு படம் பண்ணு எனக் கூறிவிட்டேன்” என்றார். மறைமுகமாக சிவகார்த்திகேயனைத்தான் சொல்கிறார் என இந்த விடியோ வைரலானது.

இந்த நிலையில் இன்று வெங்கட் பிரபு, ”ஒரு அப்பாவுக்குத் தன் மகனின் திரைப்படம் நடக்காமல் இருக்கும்போது ஏற்படும் வருத்துங்களைப் புரிந்துகொள்கிறேன். ஆனால், அவருக்கு நடந்தது முழுமையாகத் தெரியாது என்பதால் அவரையும் குறை சொல்ல முடியாது. சிவகார்த்திகேயனுடனான திரைப்படம் சில காரணங்களால்தான் கைவிடப்பட்டது. வேறு ஏதாவது கதையில் அவருடன் இணைய வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக இயக்குவேன். சிவகார்த்திகேயன் எப்போதும் என் அன்பிற்குரிய நண்பர், சகோதரர். அவரின் சேயோனுக்கு வாழ்த்துகள். நானும் என் அடுத்த திரைப்பட பணிகளில் இருக்கிறேன். இந்த விவகாரத்தை நிறுத்திவிடுவோம்.” எனப் பதிவில் கூறினார்.

தற்போது, இதனைப் பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்,”சார், நாமெல்லாம் குடும்பம். இதற்காக போய் தீவிரமாக பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்! உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார். முன்பே சொல்லியிருக்கிறேன்; நான் எப்போதும் வெங்கட் பிரபுவின் ரசிகன். விரைவில் உங்களுடன் பணியாற்றக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Sivakarthikeyan has responded to director Venkat Prabhu's post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER