மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!மதுரையில் முதல்வர் விஜய் சாலைவலம்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சிவகார்த்திகேயனுடான திரைப்படத்தைக் கைவிட்ட வெங்கட் பிரபு!

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் குறித்து...

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு

Published On :

சிவகார்த்திகேயன் உடனான திரைப்படம் கைவிடப்படுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தன் 26-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளனர். மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இப்படத்திற்கு முன்பே இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். அதற்கான, சந்திப்புகள் நடைபெற்றதுடன் படப்பிடிப்பு குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தையிலேயே இருந்தது. சேயோனுக்குப் பின் இவருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து, கங்கை அமரன் நேர்காணலில் பேசிய போது, “ஒரு நடிகர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருந்தார். ஆனால், அந்த நடிகர் நடித்த படம் ஒன்று ஹிட் அடித்ததும் காத்திருக்க வைத்தார். அப்படத்திற்கு முன்பே கால்ஷீட் கொடுத்துவிட்டார். ஆனால், இப்படி செய்தது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர் காலை ஏன் நாம் பிடிக்க வேண்டும்? என வெங்கட் பிரபுவிடம் வேறு படம் பண்ணு எனக் கூறிவிட்டேன்” என்றார். மறைமுகமாக சிவகார்த்திகேயனைத்தான் சொல்கிறார் என இந்த விடியோ வைரலானது.

இந்த நிலையில், ”சிவகார்த்திகேயனுடன் திரைப்படம் சில காரணங்களால்தான் கைவிடப்பட்டது. வேறு ஏதாவது கதையில் அவருடன் இணைய வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக இயக்குவேன். தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். என் சகோதரர் சிவகார்த்திகேயனின் சேயோனுக்கு வாழ்த்துகள். நானும் என் அடுத்த திரைப்பட பணிகளில் இருக்கிறேன்” என வெங்கட் பிரபு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

Director Venkat Prabhu has confirmed that the film with Sivakarthikeyan has been dropped.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.