
யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ. 1 கோடி மானநஷ்டஈடு கோரி அமைச்சர் பிரபு வழக்கு!
யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ. 1 கோடி மானநஷ்டஈடு கோரி அமைச்சர் பிரபு வழக்கு தொடர்ந்திருப்பது பற்றி...
அமைச்சர் டி.கே. பிரபு - கோப்புப்படம்.
தனக்கு எதிராக சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பி வரும் யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ. 1 கோடி மானநஷ்டஈடு கோரி தமிழ்நாடு கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
காரைக்குடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தவெகவைச் சேர்ந்த பல் மருத்துவரான டி.கே. பிரபு, தமிழ்நாடு அமைச்சரவையில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இவர், தனக்கு எதிராக யூடியூபர் மாரிதாஸ் சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில், பொய்யான ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். எனவே, அவருக்கு எதிராக ரூ. 1 கோடி மானநஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜான் திலகவதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை முடித்து விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
Summary
Minister Prabhu files Rs 1 crore defamation suit against YouTuber Maridhas!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






