வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

யுவன் இசையில் பிரபு நடிக்கும் புதிய படம்! படப்பிடிப்பு தொடக்கம்!

இளைய திலகம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது குறித்து...

New film starring Prabhu and Vijay Varma! Filming begins

படப்பிடிப்பை தொடக்கிவைத்தபோது... - எக்ஸ்

Published On :

இளைய திலகம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

ரைட்டர் படத்தை இயக்கிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் இப்படத்தில் பிரபுவுடன், விஜய் வர்மா நடிக்கிறார்.

நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.

இவர்களுடன் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்கிறார்.

டார்க் ஹியூமர் பாணியில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது.

பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ், ராகுலின் ஏவியேட் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Summary

New film starring Prabhu and Vijay Varma! Filming begins

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER