
விக்ரம் பிரபுவின் 26 வது படத்தின் பெயர் அறிவிப்பு!
நடிகர் விக்ரம் பிரபுவின் 26 வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
விக்ரம் பிரபு - கோப்புப் படம்
நடிகர் விக்ரம் பிரபுவின் 26 வது படத்தின் பெயர் திங்கள்கிழமை (ஆக. 31) அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிறை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், விக்ரம் பிரபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்ரம் பிரபுவின் 26 வது படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு 'சிட்டி ஆஃப் கோல்டு' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார்.
படத்தின் நாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும், இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
After The BLOCKBUSTER Success Of #Sirai, #VikramPrabhu Is Back With Another Promising Film #CityOfGold ð¥
— Trendswood (@Trendswoodcom) August 31, 2026
Glimpse Looks Very Interesting, Promising A Pakka Action Thriller With An Interesting Storyline. Definitely Looking Forward To This One ð¤https://t.co/USdLtrauTa pic.twitter.com/utFa6eP1mF
Summary
The title of actor Vikram Prabhu's 26th film was announced on Monday (Aug. 31).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




