இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

நடிகர் விக்ரம் பிரபு படத்தில் அறிமுகமாகும் அமலா ஷாஜி!

நடிகர் விக்ரம் பிரபு படத்தில் அமலா ஷாஜி அறிமுகமாவது பற்றி...

vikram prabhu

விக்ரம் பிரபு, அமலா ஷாஜி - Instagram

Published On :31 ஆகஸ்ட் 2026, 1:23 pm IST

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 26-வது படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

‘சிறை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு தனது 26-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்தை சித்தார்த் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் நாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் போஸ்டரை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அமலா ஷாஜி, ”சிறிய தொடக்கமாக இருந்தாலும் சிறப்பான தொடக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”எனது கனவு நிஜமாகியுள்ளது. எனது முதல் படம் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.என்னுடைய தொடக்கத்தை அழகாக்கி, இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த அமலா ஷாஜி இன்ஸ்டாகிராமில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். 42 லட்சம் பேர் இவரது கணக்கைப் பின்தொடர்கிறார்கள்.

Summary

Amala Shaji makes her debut in actor Vikram Prabhu's film!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.