3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

காதலரை கரம் பிடித்தார் நடிகை வினுஷா தேவி!

பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா தேவிக்கு தனது காதலருடன் திருமணம் நடைபெற்றது குறித்து....

Bharathi kannamma Actress Vinusha Devi

வினுஷா தேவி / லிங்கேஸ்வரன் - இன்ஸ்டாகிராம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 4:14 pm IST

பாரதி கண்ணம்மா புகழ் நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை கரம்பிடித்தார்.

இருவருக்கும் இன்று விமரிசையாக திருமணம் நடைபெற்றது. சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடிகை ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகை வினுஷா தேவி அப்பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார்.

இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா -2வது பாகத்திலும் நாயகியாக நடித்து புகழ் பெற்றார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.

அதற்கு பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் சுட்டும் விழிச் சுடரே என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்...

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்...

திரையில் வெற்றிகரமான நாயகியாக வலம் வரும் வினுஷா தேவி, நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. இதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் வினுஷா பகிர்ந்திருந்தார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்...

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்...

தற்போது இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சின்ன திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலர் பதிவிட்டுள்ளனர்.

சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வினுஷா - லிங்கேஸ்வரன் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.