
மெட்டி ஒலி நினைவுகள்... இயக்குநர் திருமுருகனை சந்தித்த நடிகை வனஜா!
இயக்குநர் திருமுருகனை மெட்டி ஒலி தொடரில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை வனஜா நேரில் சந்தித்துள்ளது குறித்து...
திருமுருகன் - வனஜா - இன்ஸ்டாகிராம்
இயக்குநர் திருமுருகனை மெட்டி ஒலியில் நடித்து புகழ் பெற்ற நடிகை வனஜா நேரில் சந்தித்துள்ளார்.
மெட்டி ஒலி தொடரில் இருவரும் இணைந்து கோபி - சரோ என்ற பாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது பழைய கோபி - சரோவை நினைவூட்டுவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் 2002 ஏப்ரல் முதல் 2005 ஜூன் வரை மெட்டி ஒலி தொடர் ஒளிபரப்பானது. சன் தொலைக்காட்சியில் அதிக நாள்கள் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் என்ற பெருமையை மெட்டி ஒலி அப்போது படைத்திருந்தது.
இயக்குநர் திருமுருகன் இயக்கிய இத்தொடரில் நடித்த போஸ் வெங்கட், சஞ்சீவ் வெங்கட், காயத்ரி, ராஜ்காந்த் உள்ளிட்ட பலரும் சின்ன திரையில் பிரபல நடிகர்களாக உள்ளனர்.
இத்தொடரில் நடிகை அருணா தேவிக்கு கணவராக நடித்தவர் இயக்குநர் திருச்செல்வம். இவர் இயக்குநர் திருமுருகனின் உதவி இயக்குநராவார். இவர் தற்போது எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார்.
இதனிடையே மெட்டி ஒலியில் நடித்த நடிகை வனஜா பரத்குமார், இயக்குநர் திருமுருகனை சந்தித்துள்ளார். கோயிலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
அப்போது இருவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இப்படத்தை நடிகை வனஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது:
''சில சந்தர்ப்பங்கள் சில சந்திப்புகளை அழகாக்குகின்றன. அப்படியான ஒரு அழகான சந்திப்பு இன்று..கிடைத்த சில நிமிடங்களில் சிறகடித்துப் பறந்தன மெட்டி ஒலியின் இனிமையான நினைவுகள்... நன்றி இயக்குநர்'' எனப் பதிவிட்டுள்ளார்.
மெட்டி ஒலி தொடர் விறுவிறுப்பாகவும் மக்கள் மனம் கவர்ந்த தொடராகவும் இருந்த நிலையில், அதுபோன்று மீண்டும் விறுவிறுப்பான தொடர் வேண்டும் என ரசிகர்கள் பலர் திருமுருகனிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நாதஸ்வரம், கல்யாண பரிசு ஆகிய தொடர்களும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகிய நிலையில், தற்போது ஒளிபரப்பாகும் தொடர்கள் அந்த நெருக்கத்தை தருவதில்லை எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
Metti Oli actress Vanaja met Director Thirumurugan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







