FOLLOW US

ON GOOGLE DISCOVER

தைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

ஒழுக்கம் விழுப்பம்... சாக்‌ஷி அகர்வாலை விமர்சிக்கும் ரசிகர்கள்!

நடிகை சாக்‌ஷி அகர்வாலின் திருக்குறள் பதிவுக்கு ரசிகர்கள் விமர்சனம்...

News image

நடிகை சாக்‌ஷி அகர்வால்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

நடிகை சாக்‌ஷி அகர்வால் பதிவிட்ட திருக்குறளால் அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாக்‌ஷி அகர்வால். திரைப்படங்களில் குறைவாக நடித்தாலும் விளம்பரங்கள் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் அவருக்கான ரசிகர்களும் இருக்கின்றனர். அண்மையில், புதிதாக தொழில் ஒன்றையும் தொடங்கினார்.

இந்த நிலையில், பெண்களை அவமதிக்கும் விதமாகப் பேசியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கதை செய்யப்பட்டபோது நடிகை நிவேதா பெத்துராஜ்,

”புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கம் தரும்” என்கிற திருக்குறளைப் பதிவிட்டார். இது பேசுபொருளானது.இதற்காக, ஆதரவாகவும் எதிரகாகவும் விமர்சனங்களையும் சந்தித்தார்.

அதேநேரம், நடிகை சாக்‌ஷி அகர்வாலும் தன் எக்ஸ் பக்கத்தில்,

“ஒழுக்கம் விழுப்பம் தரலான்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்." என்கிற திருக்குறளைப் பதிவு செய்தார்.

இவரும் மறைமுமாக கருத்து சொன்னதால் சிலர் அதனை வரவேற்றாலும் இன்னும் சிலர் தொடர்ச்சியாக கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடும் நீங்கள் ஒழுக்கம் பற்றி பேசலாமா? என சாக்‌ஷியை விமர்சித்தும் வருகின்றனர்.

actress Sakshi Agarwal over a Thirukkural verse she posted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.