மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்டி20 தொடா் முதல் ஆட்டம்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!தமிழகத்தில் அக். 19-ஆம் தேதியுடன் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவு‘வெற்றிப் பயணம்’ திட்டம்: அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 17 வழிகாட்டு நெறிமுறைகள்!பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்!இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க இந்தியா-ஸ்விட்சா்லாந்து முடிவு: 5 ஒப்பந்தங்கள் கையொப்பம்மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

தனி நபருக்கு கூடிய கூட்டம்! வரலாறு படைத்த பிக் பாஸ் மாயாவின் நாடகம்!

பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை மாயா கிருஷ்ணாவின் நிகழ்ச்சி சாதனை படைத்துள்ளது குறித்து...

 Actress Maya Krishnan

மாயா கிருஷ்ணன் - இன்ஸ்டாகிராம்

Published On :

பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை மாயா கிருஷ்ணாவின் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

சுதந்திர நாளன்று சென்னை மியூசிக் அகாதெமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தமாக இருந்த 1,500 இருக்கைகளும் முன்பதிவாகி சாதனை படைத்தது. தனியொரு நபரின் நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த அரங்கமும் நிரம்பியதால், பலரும் மாயாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல மேடை நாடகக் கலைஞரான நடிகை மாயா கிருஷ்ணன், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதற்கு முன்பு கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திரைக்கதை எழுதி இயக்கத்தில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். இதனிடையே தொடர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறார்.

யூடியூப் தளத்தில் மஞ்சுளா டீச்சர் என்ற பாத்திரத்தில் பகடியாகப் பேசி பெண்ணுரிமை, பெண்களுக்கு எதிரான சமூக நிலை குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சுதந்திர நாளையொட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி பொம்ளேல் என்ற காமெடி நிகழ்ச்சியை அரங்கேற்றினார். சென்னை மியூசிக் அகாதெமியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியைக் காண அரங்கத்தின் 1500 இருக்கைகளும் நிரம்பின.

ரசிகர்களை சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கும் வகையிலான தனியொரு நபரின் நிகழ்ச்சிக்காக அரங்கம் நிறைய ரசிகர்கள் கூடியுள்ளதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.