
வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் 3 புதிய போட்டியாளர் யார்?
வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் குறித்து...

விஜய் சேதுபதி - படம்: எக்ஸ்
வைல்டு கார்டு மூலம் 3 புதிய போட்டியாளர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இன்று(அக். 4) வருகைத்தரவுள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் முந்தைய சீசன்கள்போல இல்லாமல், வித்தியாசமான பாணியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.
லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சவின்யா, குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார், ஆனந்தி ஆகிய 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஸ்வாரசியத்தை கூட்டுவதற்காக, லீடர் எவிக்ஷன் புராசஸில் வெளியேறிய லட்சுமி பிரியா, ஜாவித், சவின்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகைத் தந்தனர்.
இவர்கள் மூவரும், ஏற்கெனவே வீட்டிலிருக்கும் ஆர்வமில்லாமல் விளையாடும் ஒரு போட்டியாளரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை கயிறு மூலம் கட்டிக் கொண்டுனர். அதன்படி, லட்சுமி பிரியா, குமரனுடன், சவின்யா, அஸ்மிதாவுடன், ஜாவேத் ஷெரிப், தன்யாவுடன் இணைக்கப்பட்டனர்.
இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் போட்டியாளர்கள் பட்டியலில் இவர்கள் 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.
இந்தச் சூழலில், கயிற்றை அவிழ்த்துக்கொண்டு, ரூ. 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நடிகர் குமரன் வீட்டைவிட்டு வெளியேறினார். இதனால், லட்சுமி பிரியா காப்பாற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற சவின்யா, ஜாவேத் ஷெரிப் ஆகியோர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டனர்.
மூவர் வெளியேறிய நிலையில், மூன்று புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகைத்தரவுள்ளனர். அதன்படி டிடிஎஃப் வாசன், கரிஷ்மா, அக்ஷிதா ஆகிய மூன்று பேர், பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Summary
Three new contestants are set to enter the Bigg Boss show today (Oct. 4) via the wild card entry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






