மேகேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் மேலிடத்திற்கு முதல்வர் விஜய் அழுத்தம் கொடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்! நவ. 18-ல் தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்! சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகம் ஈடு இணையற்ற பங்களிப்பு: பிரதமர் மோடிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

பிக் பாஸ் 10: இந்த வாரம் எதிர்பாராத இருவர் வெளியேற்றம்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் குறித்து...

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி. - படம்: விடியோ கிளிப்

Updated On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 10 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் 70-வது நாளை எட்டியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி, தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை இல்லாத வகையில் புதிய விதிகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி மாறியது. அதாவது, பிக் பாஸ் இல்லாமல் பிக் பாஸ் வீடு இயங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் விதி மீறினாலோ, அநாகரிகமாக நடந்துகொண்டாலோ, ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ பிக் பாஸ் குரலாக வந்து வழிநடத்தினர்.

அதன்படி, இந்த வாரம் முழுவதுமே பிக் பாஸ் இல்லாமல் வீடு இயங்கியது. போட்டியாளர்களில் ஒருவர் ஜூனியர் பிக் பாஸாக இருக்கலாம் என்ற விதி வகுக்கப்பட்டு, அதன்படி, இயங்கியது.

இதனிடையே, 10வது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு தன்யா, அவினாஷ், முகேஷ், லட்சுமி பிரியா, டிடிவி வாசன், முனியம்மாள், முத்தழகி, ஆகிய 7 பேர் தேர்வாகி இருந்தனர்.

இந்த வாரம் முழுவதும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற அவினாஷ், முத்தழகி ஆகிய இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடினமான போட்டியாளர்கள் பட்டியலில் இருந்த நிலையில், அவினாஷ், முத்தழகி வெளியேறி இருப்பது பார்வையாளர்களுகு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Summary

Reports indicate that two contestants have been eliminated from Bigg Boss Season 10 this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.