டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பிக் பாஸ் 10: இந்த வாரம் இருவர் வெளியேற்றம்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் குறித்து...

Updated On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 9 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் 63-வது நாளை எட்டியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி, தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்காகவும் சிலர் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர்.

இதனிடையே, 9வது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு அஷ்மிதா, அவினாஷ், அக்‌ஷிதா, ஜேசன், வினோத் பாபு, முனியம்மாள், முத்தழகி, பிருத்வி ஆகிய 8 பேர் தேர்வாகி இருந்தனர்.

இந்த வாரம் முழுவதும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற அஷ்மிதா, அக்‌ஷிதா ஆகிய இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் போட்டியாளர் ஜேசன், அவரிடம் இருந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்தி அவினாஷை காப்பாற்றியுள்ளார்.

Summary

Reports indicate that two contestants have been eliminated from Bigg Boss Season 10 this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.