
பிக் பாஸ் 10: மாரடைப்பால் உயிரிழந்த ஆனந்தியின் தந்தை... அவசரமாக வெளியேற்றம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஆனந்தி வெளியேறியது குறித்து...

நடிகை ஆனந்தி - படம்: எக்ஸ்
பிக் பாஸ் போட்டியாளர் ஆனந்தியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், நடிகை ஆனந்தி நிகழ்ச்சியில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டார்.
ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் முந்தைய சீசன்கள்போல இல்லாமல், வித்தியாசமான பாணியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.
லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சவின்யா, குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார், ஆனந்தி ஆகிய 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
இதில் பிளாக் பாண்டி, சவின்யா, ஜாவித், மணிவண்ணன், லட்சுமி பிரியா ஆகிய போட்டியாளர்கள் கடந்த வாரங்களில் வெளியேறி இருக்கின்றனர்.
இந்த வார நாமினேஷனுக்கு அன்சர், ஆனந்தி, சாந்தினி, தன்யா, முனியம்மாள், ஷமா, ராகவ் ஆகியோர் சக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நாமினேஷன் பட்டியலில் இருந்த போட்டியாளர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மக்கள் வாக்களித்தனர், இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஆனந்தி, பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆனால், நடிகை ஆனந்தியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததால்தான் வெளியேறி இருக்கிறார். தொகுப்பாளர் விஜய் சேதுபதியே வீட்டுக்குச் செல்லுங்கள், உங்களுக்கே சூழல் புரியும் என்று சூசமாக தெரிவித்து, நேற்றைய நிகழ்ச்சியிலேயே அவசரமாக அனுப்பி வைத்தார்.
Summary
Information regarding which contestant was evicted from the Bigg Boss show this week has been revealed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







