16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பிக் பாஸ் வீட்டுக்குள் புதிய போட்டியாளர்! யார் இவர்?

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் நுழைந்த நடிகை ஆனந்தி குறித்து...

bigg boss 10

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் ஆனந்தி. - படம்: எக்ஸ்

Published On :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் புதிய போட்டியாளர் இணைந்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப். 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதியே இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சாவின்யா, குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார் ஆகிய 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.

இதனிடையே, நடிகர் பிளாக் பாண்டிக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களால் சாவின்யா தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பப்பட்டார்.

கடந்த வாரம் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மணிவண்ணன் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் 10 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடனக் கலைஞர் ஆனந்தி, பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இது தொடர்பான முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

யார் இந்த ஆனந்தி?

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிப் பெற்றவர் நடிகை ஆனந்தி.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து, மீகாமன், தாரை தப்பட்டை மற்றும் பறந்து செல்ல வா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து, கனா காணும் காலங்கள், கார்த்திகைப் பெண்கள், யமுனா போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

அண்மையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜன நாயகன் படத்தில் பணியாற்றியது குறித்தும், அந்தப் படத்தில் தான் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட ஏமாற்றம் குறித்தும் அவர் பேசியது சர்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A new contestant has joined the Bigg Boss 10 show currently airing on Vijay TV

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.